முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தென்காசி To விருதுநகர் ரயில்கள்.. வழித்தடத்தில் முக்கிய மாற்றங்கள்.. ரயில்வே அறிவிப்பு..!

தென்காசி To விருதுநகர் ரயில்கள்.. வழித்தடத்தில் முக்கிய மாற்றங்கள்.. ரயில்வே அறிவிப்பு..!

ரயில்

ரயில்

தென்காசி - விருதுநகர் இடையே செல்லும் சிறப்பு ரயில் தவிர அனைத்து ரயில்களின் இயக்கங்களிலும் வரும் 9ம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

மதுரை ரயில் நிலைய நடைமேடைகளுடன் இரட்டை ரயில் பாதையை இணைக்கும் பணிகள் காரணமாக தென்காசி - விருதுநகர் இடையே செல்லும் சிறப்பு ரயில் தவிர அனைத்து ரயில்களின் இயக்கங்களும் வரும் 9ம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கான மாற்று வழித்தடம், பகுதியாக ரத்து, முழுமையாக ரத்து ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ரயில் இயக்கங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

1) வண்டி எண்: 06663 காலை 11.30 க்கு புறப்படும் மதுரை-செங்கோட்டை விரைவு ரயில் 06-02-23 முதல் 16-02-23 வரை மதுரை-விருதுநகர் இடையே இயங்காது. இந்த ரயில் வழக்கமான நேரத்தில் விருதுநகரிலிருந்து கிளம்பும். மேலும் இந்த ரயிலானது 17-02-23 முதல் 07-03-23 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

2) வண்டி எண்: 06664 மதியம் 11.50 க்கு புறப்படும் செங்கோட்டை-மதுரை விரைவு ரயில் 05-02-23 முதல் 15-02-23 வரை விருதுநகர்-மதுரை இடையே இயங்காது. இந்த ரயில் வழக்கமான நேரத்தில் விருதுநகர் வரை இயக்கப்படும். மேலும் இந்த ரயில் 16-02-23 முதல் 06-03-23 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

3) வண்டி எண்: 06503 மாலை 03.45 க்கு புறப்படும் செங்கோட்டை-மதுரை விரைவு ரயில் 16-02-23 முதல் 05-03-23 வரை விருதுநகர்-மதுரை இடையே இயங்காது. இவ்வண்டி வழக்கமான நேரத்தில் விருதுநகர் வரை இயக்கப்படும்.

4) வண்டி எண்: 06504  காலை 07.10 க்கு புறப்படும் மதுரை-செங்கோட்டை விரைவு ரயில் 17-02-23 முதல் 06-03-23 வரை மதுரை-விருதுநகர் இடையே இயங்காது. இவ்வண்டி வழக்கமான நேரத்தில் விருதுநகரிலிருந்து கிளம்பும்.

5) வண்டி எண்: 16847 மதியம் 11.30 க்கு புறப்படும் மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு வண்டி01-03-23 முதல் 03-03-23 வரை திருச்சி-செங்கோட்டை இடையே இயங்காது.

6) வண்டி எண்: 16848 காலை 07.00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு வண்டி 09-02-23 முதல் 01-03-23 வரை மற்றும் 05-03-23 & 06-03-23 ஆகிய தேதிகளில் மாற்று வழிப்பாதையில் இயங்கும். மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்களுடன் மாற்று வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு இயக்கப்படும். மதுரை,திண்டுக்கல் வழியே இயங்காது. மேலும் இவ்வண்டி 02-03-23 முதல் 04-03-23 வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கோட்டை-திருச்சி இடையே இயங்காது.

7) வண்டி எண்: 12661 சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு வண்டி 23-02-23 முதல் 02-03-23 ஆகிய தேதிகளில் மாற்று வழிப்பாதையில் இயங்கும். மானாமதுரை நிறுத்தம் வழங்கப்பட்டு மாற்று வழித்தடத்தில் செங்கோட்டைக்கு இயக்கப்படும். திண்டுக்கல்,மதுரை வழியே இயங்காது.

8) வண்டி எண்: 12662 செங்கோட்டை-சென்னை எழும்பூர் பொதிகை அதிவிரைவு வண்டி 23-02-23 முதல் 03-03-23 ஆகிய தேதிகளில் மாற்று வழிப்பாதையில் இயங்கும். மானாமதுரை நிறுத்தம் வழங்கப்பட்டு மாற்று வழித்தடத்தில் சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும். மதுரை,திண்டுக்கல் வழியே இயங்காது.

9) வண்டி எண்: 20681 சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு வண்டி 24-02-23 & 25-02-23 மற்றும் 01-03-23 ஆகிய தேதிகளில் திருச்சி வரை இயக்கப்படும். திருச்சி-செங்கோட்டை இடையே இயங்காது.

10) வண்டி எண்: 20682 செங்கோட்டை-சென்னை எழும்பூர் சிலம்பு அதிவிரைவு வண்டி 25-02-23 & 26-02-23 மற்றும் 02-03-23 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து புறப்படும். செங்கோட்டை-திருச்சி இடையே இயங்காது.

11) வண்டி எண்: 16101 சென்னை எழும்பூர்-கொல்லம் விரைவு வண்டி 28-02-23, 01-03-23 & 02-03-23 ஆகிய தேதிகளில் மாற்று வழிப்பாதையில் இயங்கும். மானாமதுரை நிறுத்தம் வழங்கப்பட்டு மாற்று வழித்தடத்தில் கொல்லத்திற்கு இயக்கப்படும். திண்டுக்கல், மதுரை வழியே இயங்காது.

12) வண்டி எண்: 16102 கொல்லம்-சென்னை எழும்பூர் விரைவு வண்டி 01-03-23 & 02-03-23 ஆகிய தேதிகளில் மாற்று வழிப்பாதையில் இயங்கும். மானாமதுரை நிறுத்தம் வழங்கப்பட்டு மாற்று வழித்தடத்தில் கொல்லத்திற்கு இயக்கப்படும். மதுரை,திண்டுக்கல் வழியே இயங்காது.

ரயில் பயணிகள் இந்த இயக்க மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிட வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

First published:

Tags: Train