தென்காசி, செங்கல்பட்டு தமிழகத்தின் புதிய மாவட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு

நெல்லை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.

தென்காசி, செங்கல்பட்டு தமிழகத்தின் புதிய மாவட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு
பேரவையில் உரையாற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
  • News18
  • Last Updated: July 18, 2019, 4:02 PM IST
  • Share this:
நெல்லை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 32 வருவாய் மாவட்டங்கள் இருக்கின்றன. கடைசியாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதற்கான ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு புதிய மாவட்ட செயல்பாட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.


இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இதற்காக இரண்டு தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.தென்காசி மாவட்டத்தின் கீழ் தென்காசி, சிவகிரி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய வட்டங்கள் உள்ளடங்கும் என கூறப்படுகிறது.

கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவரும் நிலையில், இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

First published: July 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading