தென்காசி மக்களவைத் தொகுதி

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 73.6% வாக்குகள் பதிவாகின.

தென்காசி மக்களவைத் தொகுதி
தென்காசி
  • News18
  • Last Updated: March 29, 2019, 12:37 PM IST
  • Share this:
இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மக்களவைத் தொகுதி 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அதிகபட்சமாக தேசிய கட்சியான காங்கிரஸ் 9 முறை வெற்றி பெற்றுள்ளது. 1957-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை தென்காசி தொகுதியை காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது.

1977-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம். அருணாச்சலம் தொடர்ந்து தனது வெற்றியைப் பதிவு செய்தார்.  இதில், 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக அருணாச்சலம் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


அதன் பின்னர் அ.தி.மு.க வேட்பாளர் முருகேசன் 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2004 மற்றும் 2009 ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் சி.பி.ஐ கட்சி இங்கு வெற்றி பெற்றது.

இறுதியாக 2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் முருகேசனின் மனைவி வசந்தி முருகேசன் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு 4,24,586 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தென்காசி மக்களவைத் தொகுதியில் இதுவரையில் தி.மு.க ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை.

16-வது மக்களவைத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 2,62,812 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட ம.தி.மு.க-வின் சதன் திருமலைக்குமார் 1,90,233 வாக்குகள் பெற்றுத் தோல்வி அடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் ஜெயக்குமார் 58,963 வாக்குகளையும் இந்திய பொதுவுடைமை கட்சியின் வேட்பாளர் பி. லிங்கம் 23,528 வாக்குகளையும் பெற்று தோல்வி அடைந்தனர். 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 73.6% வாக்குகள் பதிவாகின.
First published: March 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading