Home /News /tamil-nadu /

'100 நாள் வேலை திட்டம் தொடரும் , கிராம ஊராட்சி நலத்திட்டங்களும் தொடரும் என திமுக அரசு அறிவிக்க வேண்டும்' - விவசாயிகள் கோரிக்கை

'100 நாள் வேலை திட்டம் தொடரும் , கிராம ஊராட்சி நலத்திட்டங்களும் தொடரும் என திமுக அரசு அறிவிக்க வேண்டும்' - விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை

Tenkasi District : தற்போதைய அரசு தேர்தல் வாக்குறுதியின் போது நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பேரூராட்சிகளிலும், நகராட்சிகளிலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தது. ஆனால் தற்போது இதற்கு மாறாக உள்ளது.

    100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் உதவியுடன் நிதி ஒதுக்கீடு செய்தால் அனைத்து பகுதிகளிலும் வேலை செய்யலாம் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தென்காசி மாவட்ட தலைவர் பாலுசாமி தெரிவித்துள்ளார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) அல்லது என்பது இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். இச் சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது. முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர்.

    இந்த திட்டம் துவங்கப்பட்டபோது ஒரு நாளைக்கு 80 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டது. தற்போது 273 ரூபாய் ஒரு நாளைக்கு வழங்கிவருகின்றது. மேலும் இந்த தொழிலாளர்கள் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தொழிலாளர்களை கொண்டு சாலைகள், குளங்கள், கால்வாய்களை மேம்படுத்திட பணிசெய்தனர்.
    தற்போது நாடுமுழுவதும் 22 கோடி பேர் வேலை செய்கின்றனர். இதுபற்றி தமிழக அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்தில் பேசும்போது தமிழகத்தில் இந்த திட்டத்தால் ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்த முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த திட்டத்தை மக்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ALSO READ | 24 மணி நேரம் கெடு விதித்த செந்தில் பாலாஜி... ஆளுநரை சந்தித்து அண்ணாமலை புகார் மனு
     இதுகுறித்து தென்காசி மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கூறும்போது, தற்போதைய அரசு தேர்தல் வாக்குறுதியின் போது நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பேரூராட்சிகளிலும், நகராட்சிகளிலும் விரிவுபடுத்தப்படும் எனவும் தேர்தல் வாக்குறுதியின் போது தெரிவித்தார். ஆனால் தற்போது இதற்கு மாறாக உள்ளதாகவும் மத்திய அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் குறைவான நிதியை இத்திட்டத்திற்கு ஒதுக்கி உள்ளதாகவும் இதனால் இந்த திட்டம் தற்போது செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே மாநில அரசு இதற்கான நிதி ஆதாரத்தை திரட்டி இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.



     

    மேலும் இதுகுறித்து விவசாய சங்கத்தை சேர்ந்த கணபதி கூறும்போது,  இந்த திட்டம் பேரூராட்சிகளில் விரிவு படுத்த கூடாது என்று கூறுவது சரியானதல்ல அவர்கள் அரசு வழங்கக்கூடிய பல்வேறு விதமான சலுகைகள் வராமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாகவும் அதனால் இந்த எதிர்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து அனைத்து பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    ALSO READ | கல்குவாரி பெயரில் கனிமவளங்கள் கொள்ளை... புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    நகர்ப்புற மக்கள் , பேரூராட்சி , கிராமம் என அனைத்திற்கும் பெரிய வித்யாசம் என்பது கிடையாது. எல்லாமே உழைக்கும் மக்கள் தான். கிராம புற மக்கள் அச்சப்படுவ தென்பது வெறும் 100 நாள் வேலைக்காக மட்டும் அல்ல. கிராம ஊராட்சியில் நலத்திட்டங்கள் கொடுப்பது, குறிப்பாக ஆடு கொடுக்காங்க , மாடு கொடுக்காங்க , பசுமை வீடு கொடுக்காங்க இது மாதிரியான நலத்திட்டங்கள் போய்விடுமோ எனும் அச்சமும் இருக்கு.



    கிராம சபை கூட்டம் மூலமாக கிராமத்துகாரன் நிர்வாகம் குறித்து பேச முடியும். ஆகவே அரசு 100 நாள் வேலை திட்டம் தொடரும் , கிராம ஊராட்சி நலத்திட்டங்களும் தொடரும் என அறிவிப்பதன் மூலமாகத் தான் அச்சத்தை போக்க முடியும். அதன் மூலமாக தீர்மானம் காண முடியும். ஆகவே திமுக அரசு இதனை நிறைவேற்றிடத் தான் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

    ச.செந்தில், செய்தியாளர், தென்காசி மாவட்டம்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Farmers, Tenkasi

    அடுத்த செய்தி