தென்காசியில் கிருஷ்ணசாமியை பின்னுக்குத் தள்ளி திமுக வேட்பாளர் தனுஷ் குமார் முன்னிலை!

1 லட்சத்து 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தனுஷ் குமார் முன்னிலையில் இருக்கிறார். அவருடைய வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது.

தென்காசியில் கிருஷ்ணசாமியை பின்னுக்குத் தள்ளி திமுக வேட்பாளர் தனுஷ் குமார் முன்னிலை!
தனுஷ் குமார் | கிருஷ்ணசாமி
  • News18
  • Last Updated: May 23, 2019, 4:34 PM IST
  • Share this:
தென்காசி தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியை திமுக வேட்பாளர் தனுஷ் குமார் பின்னுக்குத்தள்ளியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமி, அதிமுக + பாஜக கூட்டணியில் இணைந்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டார்.

முதலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்த அவர், தனக்கு எதிராக திமுக நேரடியாக களமிறங்கியதால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.


இதுவரையில் தென்காசி தொகுதியில் 5 முறை மக்களவைத் தேர்தலுக்காகப் போட்டியிட்டு ஐந்து முறையும் தோல்வியைத்தான் தழுவினார்.

இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக அவர் களப்பணியாற்றினார். இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் முன்னிலையில் இருந்தார்.

1 லட்சத்து 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தனுஷ் குமார் முன்னிலையில் இருக்கிறார். அவருடைய வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது.முதன்முறையாக 1996-ம் ஆண்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிருஷ்ணசாமி. அதன் பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக கூட்டணியுடன் இணைந்து மீண்டும் ஒட்டப்பிடாரம் தொகுதியிலிருந்தே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

First published: May 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading