ஸ்டேட்டஸ் மோகம்; தன்னை தானே இறந்துவிட்டதாக கூறி, ஸ்டேட்டஸ் வைத்த விநோத இளைஞர்!

தன்னை தானே இறந்துவிட்டதாக கூறி, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

சங்கரன்கோவிலை சேர்ந்த மகாபிரபு என்ற இளைஞர், தனது வாட்ஸ் அப்பில் என்ன ஸ்டேட்டஸ் வைப்பது என்று தெரியாமல், தன்னையே மாரடைப்பால் மரணமடைந்தாக கூறி, வால்போஸ்ட் அடித்து ஓட்டி, அதனை ஸ்டேட்டஸாக வைத்து நண்பர்கள், உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். 

  • Share this:
    சங்கரன்கோவிலை சேர்ந்த மகாபிரபு என்ற இளைஞர், தனது வாட்ஸ் அப்பில் என்ன ஸ்டேட்டஸ் வைப்பது என்று தெரியாமல், தன்னையே மாரடைப்பால் மரணமடைந்தாக கூறி, வால்போஸ்ட் அடித்து ஓட்டி, அதனை ஸ்டேட்டஸாக வைத்து நண்பர்கள், உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

    தற்போதுள்ள இளம் தலைமுறையினர் துக்கம், இன்பம், நடப்பு நிகழ்வுகள் அனைத்திற்குமான தங்களது எண்ண வெளிப்பாட்டையும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் ஸ்டேட்டஸ் மூலம் வெளிப்படுத்தி, அதற்கான லைக்குகளையும் வாங்கி குவிக்கின்றனர்

    அப்படி ஒரு இளைஞர் தன்னை விநோதமான முறையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைத்து நண்பர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.  தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஆவுடையாபுரம் பகுதியை சேர்ந்த கனிமாரியப்பன் மகன் மகாபிரபு (25). இவர் திருவேங்கடம் பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

    தனது வேலை நேரம் போக மற்ற நேரங்களில் செல்போனுடனே தனது நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பாடல்கள், காமெடிகள் என ஸ்டேட்டஸ் வைத்து கொண்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் வைத்த ஸ்டேட்டஸ் தனக்கே பிடிக்காமல் போக விநோதமான முறையில் ஸ்டேட்டஸ் வைக்க முயற்சி செய்து வாட்ஸ் ஆப்பில் தான் இறந்து விட்டதாக கூறி ஸ்டேட்டஸ் வைத்து உள்ளார்.

    இவர் வைத்த ஸ்டேட்டசை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் உடனடியாக அவரது எண்ணை தொடர்பு கொண்டபோது, தான் உயிரோடு இருப்பதாகவும் தான் இறந்தாக ஸ்டேட்டஸ் வைத்தால் என்ன ரெஸ்பான்ஸ் வருகிறது என்று பார்த்தேன் என்று சிரித்து கொண்டே கூறியுள்ளார். இதனை கேட்ட அவரது நண்பர்கள், உறவினர்கள் சரமாரி வசை பாடியுள்ளனர்.

    செய்தியாளர் - ச.செந்தில்




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: