தென்காசி மாவட்டம் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் பிரம்மராஜன் என்கின்ற பெண் ஊழியர் பணியாற்றிவருகிறார்
.இவர் கடந்த செவ்வாய்கிழமை செங்கோட்டை தேரடி தெரு பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து, கண்ணன் என்பவரின் ஆட்டோவில் அங்கன்வாடி மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரான கண்ணன் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பொறுத்துக்கொண்ட அந்த பெண், ஆட்டோ விட்டு இறங்கி இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதனால், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மற்றொரு வாகனத்தில், தேரடி முக்கில் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் பகுதிக்கு சென்றனர். அங்கே இருந்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணனுடன், அந்தப் பெண்ணின் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Must Read : மிஸ்டர் அண்ணாமலை வன்னியர் சமூகத்தை எதிர்ப்பது நல்லதல்ல.. காடுவெட்டி குரு மகள் பரபரப்பு அறிக்கை
அப்போது அந்தப் பெண் தனது கையில் கொண்டு வந்திருந்த விளக்குமாறால் அந்த ஆட்டோ ஓட்டுநரை சராமரியாக தாக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் கண்ணன் அந்தப் பெண்ணை ஆபாசமாக பேசியுள்ளார். அப்போது, அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் யாரும் இந்த நபருக்காக சிபாரிசு செய்யக் கூடாது என்றும் அந்தப்பெண் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த காட்சியை அருகிலிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினர். மேலும் இதுதொடர்பாக அவர் செங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கண்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் - ச.செந்தில், தென்காசி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.