தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் வீரசிகாமணியிலிருந்து அருணாசலபுரம் செல்லும் சாலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது இடத்தில் டாஸ்மார்க் கடை ஒன்று வருவதை அறிந்த அருணாசலபுரம், அரியநாயகிபுரம், அச்சம்பட்டி, மீனாட்சிபுரம், பெரியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளின் கிராம மக்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக சூழ்நிலை நிலவி காணப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடையைத் திறக்க அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை பரிசீலித்து கடையை திறக்கக்கூடாது என சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையில் டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் விதிகளில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி மாவட்டம்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.