குற்றாலநாதர் சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம்.. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
குற்றாலநாதர் சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம்.. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
குற்றாலநாதர் சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம்
Tenkasi District : முக்கிய நிகழ்வாக வரும் 9ம் தேதி திருத்தேரோட்டமும், 8ம் திருநாளையொட்டி பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையில் நடராசமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகின்றது.
குற்றாலநாதர் ஆலயத்தில் சித்திரை விசுத்திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பழமை வாய்ந்ததும் பிரசித்திபெற்ற தலமான குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை விசுத்திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம், திருவாதிரை திருவிழா வெகு விமர்சையாக 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா பரவல் காரணமாக அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் விழா நடைபெற்றது. தற்போது தடை நீக்கப்பட்ட நிலையில் இவ்விழா இன்று குற்றாலநாத சுவாமி சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் 16 வகை முலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனையுடன் வேத மந்திரங்களுடன், பஞ்ச வாத்தியத்துடன் வெகுவிமர்சையாக கொடியேற்றம் நடைபெற்றது.
இதனையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.
முக்கிய நிகழ்வாக வரும் 9ம் தேதி திருத்தேரோட்டமும், 8ம் திருநாளையொட்டி பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையில் நடராசமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகின்றது. இவ்விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கட்டளை தாரர்கள் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : ச.செந்தில்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.