2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - விசிக கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது
2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - விசிக கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது
Minor Sexually Abused | சிறு குழந்தை என்று பாராமல் ஒரு கட்சி பிரமுகர் இது போன்ற செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விசிக கவுன்சிலர் தென்காசியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மகள் குணராமநல்லூர் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுமி பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் கிளை நிர்வாகியும் குணராமநல்லூர் பஞ்சாயத்து 15 வது வார்டு உறுப்பினரான வீராசாமி (47) என்பவர் திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி தனிமையில் தவறுதலாக நடந்து உள்ளார். மேலும் இதுகுறித்து சிறு குழந்தையிடம் நீ பெற்றோர்களிடம் கூறினால் அவர்களை கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஸ்கேன் எடுத்து வர கூறியுள்ளார். அப்போது ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்து குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக குழந்தையிடம் கேட்ட போது நடந்த உண்மை சம்பவத்தை கூறி கதறி அழுததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் குற்றாலம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். தகவல் அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியின் கட்சி பிரமுகர் தலைமறைவான அவரை தேடிவந்த போலீசார் வயலில் மறைந்திருந்த போது அவரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை குழந்தையிடம் தகாத முறையில் நடந்து ஒப்புக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
சிறுகுழந்தை என்று பாராமல் ஒரு கட்சி பிரமுகர் இது போன்ற செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் பெற்றோர் தரப்பில் தெரிவித்தனர்.
செய்தியாளர்: ச.செந்தில் (தென்காசி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.