Home /News /tamil-nadu /

உலக நன்மைவேண்டி நடைபெற்ற ஆற்றுத் திருமுழுக்கு ஆரத்தி விழா.. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உலக நன்மைவேண்டி நடைபெற்ற ஆற்றுத் திருமுழுக்கு ஆரத்தி விழா.. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஆற்றுத் திருமுழுக்கு ஆரத்தி விழா

ஆற்றுத் திருமுழுக்கு ஆரத்தி விழா

Tenkasi District : தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதல்முறையாக திருமூலருக்கு ஆரத்தி திருவிழா நடைபெற்றது.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உலக நன்மைக்காக கருப்பாநதி நதிக்கரையில் ஆற்றுத் திருமுழுக்கு ஆரத்தி விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதல்முறையாக திருமூலருக்கு ஆரத்தி திருவிழா நடைபெற்றது. இவ்விழா பழனி மெய்த்தவம் அடிகள் தலைமையில் கோவிலிலிருந்து புனிதநீர் கலச குடம் மேளதாளம் முழங்க கொண்டு வந்து நதிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளை நதிக்கரையில் வைத்து மாப்பொடி, மஞ்சள், பால் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.



    தொடர்ந்து நதிக்கரையில் இரவு ஆரத்தி நடந்தது இவ்விழாவில் கன்னியாகுமரி காணி மடம் நாமரிஷி தவசி பொன் காமராஜ் மஹாராஜ், கோவை ஜீயர் சுவாமிகள், தஞ்சாவூர் ராஜசேகர் சுவாமிகள், குமரவேல் சுவாமிகள் கடையம் மவுனகுரு சுவாமிகள், ரிஷிகேஷ் சுவாமி கிருபானந்த சரஸ்வதி சுவாமிகள், கொல்லிமலை சித்தர் பழனிச்சாமி சுவாமிகள், கருமாரியம்மன் கோவில் தலைமை அர்ச்சகர் குமார்  மற்றும் சாதுக்கள் பங்கேற்று ஆரத்தியை நடத்தினர்.

    ALSO READ |  பெரியார் சிலை சேதம் - மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விழுப்புரத்தில் போராட்டம்


     இவ்விழா ஏற்பாடுகளை முண்டகக்கண்ணியம்மன் அறக்கட்டளை நிர்வாகியும் பாரதிய ஜனதா கட்சியின் வர்த்தக அணி பொறுப்பாளருமான ரேவதி பாலீஸ்வரன் செய்திருந்தார். மேலும் ஆரத்தி விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

     செய்தியாளர்: ச.செந்தில் ( தென்காசி)

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி