அரசு மேல் நிலைப்பள்ளியில் கன மழையால் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீர்- மாணவர்கள் அவதி
அரசு மேல் நிலைப்பள்ளியில் கன மழையால் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீர்- மாணவர்கள் அவதி
கன மழையால் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீர்
Tenkasi District | இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது மழை பெய்யும் போதெல்லாம் பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. மேலும் அரசு உடனடியாக தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள தரை தளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மாவட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நேற்று ஒரு நாள் மட்டும் 437 மி மீ மழை பதிவாகி உள்ளது. கடையநல்லூரில் அதிகபட்சமாக 116 மி.மீ , சங்கரன் கோவிலில் 108 மி. மீ , செங்கோட்டையில் 36 மி.மீ , சிவகிரியில் 77 மி.மீ , தென்காசியில் 100 மி.மீ என மொத்தம் மாவட்டத்தில் 437 மிமீ மழை பதிவாகி சராசரியாக 87.48 மி.மீ மழை பதிவானது
இந்த நிலையில் சுரண்டை அருகே சிவகுருநாதபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 1200க்கும் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிவளாகத்தை சுற்றி விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. எனினும் மழைநீர் மண்ணால் உறிஞ்சப்படாமல் தேங்கி நிற்கின்றது. விவசாய நிலத்தின் அருகில் பள்ளி இருந்த போதும் மரங்கள் சுற்றி காணப்படுகின்றது.
நேற்று பெய்த மழையால் இந்த பள்ளி வளாகத்தில் உள்ளேயும் வெளியேயும் தண்ணீர் தேங்கியது. பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் தண்ணீருக்குள் நடந்து வரும் சூழல் உருவானது. இதனால் மாணவ மாணவிகள் சிரமத்தித்குள்ளாயினர் மேலும் பள்ளிக்கு விடுமுறையும் அறிவித்தனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது மழை பெய்யும் போதெல்லாம் பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. மேலும் அரசு உடனடியாக தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள தரை தளத்தை உயர்த்த வேண்டும். எனவும் மாணவர்கள் நலன் கருதி தற்போது அரசு தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மழைநீர் தேக்கத்தால் பள்ளி மாணவர்கள் உடைய எதிர்காலம் கேள்விக்குறியாக கூடிய சூழ்நிலை உள்ளது.
எனவே போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும் கல்வித் துறை யினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
ச.செந்தில், செய்தியாளர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.