Home /News /tamil-nadu /

தென்காசி ஆட்சியரை கண்டித்து வருவாய்த் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு... அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

தென்காசி ஆட்சியரை கண்டித்து வருவாய்த் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு... அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

தென்காசி  மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் ஊழியர் விரோத போக்கை கடைபிடிப்பதாக கூறி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திவந்தனர்.

    தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜைக் கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டதால், அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் ஊழியர் விரோத போக்கை கடைபிடிப்பதாக கூறி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திவந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்திற்கு உட்பட்ட சங்கரன்கோவில், சிவகிரி, கடையநல்லூர், செங்கோட்டை, ஆலங்குளம், வீரகேரளம்புதூர், தென்காசி, உள்ளிட்ட தாலூகா அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்க ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை 350க்கும் மேற்பட்டோர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வருவாய்துறை அலுவலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    முன்னதாக நேற்று, வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில், மாநில துணைத்தலைவர் செந்தூர் ராஜன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் நடத்திய வருவாய்த்துறை அலுவலர்கள் கூறியதாவது-

    தென்காசி மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஊழியர் விரோத மற்றும் எதேச்சதிகார நடவடிக்கையை கண்டித்தும், கூகுள் மீட் என்ற பெயரில் துணை ஆட்சியர் முதல் அனைத்து நிலை பணியாளர்கள் வரை மனநிலையினை கருத்தில் கொள்ளாமல் தொடர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதையும், ஊழியர்கள் மத்தியில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி பணிச்சுமையினை அதிகரித்து இயல்பான பணியினை பாதிக்கும் வகையில் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக குற்றம்சாட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க : குற்றால அருவியில் குளிக்க 3 நாள் தடை

    வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்படும் என்பதால், அரசு உடனடியாக தலையிட்டு மாவட்ட ஆட்சியர்க்கும் ஊழியர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனையை தீர்வு செய்ய வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : ச.செந்தில், தென்காசி மாவட்டம்

    இதையும் படிங்க : தடுப்பூசி சான்றிதழ் அவசியம்.. கட்டாய கொரோனா பரிசோதனை.. தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை
    Published by:Musthak
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி