Home /News /tamil-nadu /

தென்காசி காவல்நிலைய வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய போலீசார்

தென்காசி காவல்நிலைய வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய போலீசார்

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் குத்துவிளக்கேற்றி பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    தென்காசி மாவட்டம் நகர பகுதியில் உள்ள காவல்நிலைய வளாகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் குத்துவிளக்கேற்றி பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில் காவல் துறையை பொருத்தவரை நாம் அனைவரும் ஒரு மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகாலமாக பணியாற்றி பொங்கல் விழாவை கொண்டாடியது இல்லை என்றார்.

    Also Read : பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம்.. விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்

    மேலும் இன்று சமத்துவமாக பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறிக்கொண்டார்.

    இந்த நிகழ்வில் டிஎஸ்பி மணிமாறன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மாதவன், முத்துபாண்டி, கபீர்தாஷன், கற்பகராஜா, ஜனார்த்தன், மாரிமுத்து, பெண் உதவி ஆய்வாளர் செல்வி, உள்ளிட்ட காவலர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கொண்டாடினர்.

    செய்தியாளர் : ச. செந்தில் 

    Read Also : முழு ஊரடங்கு : தென்காசியில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய போலீசார்

    Published by:Musthak
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி