தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கீழாம்பூர் பகுதியைச் சேர்ந்த இசக்கியாபிள்ளை மகன் செல்லப்பா. இவர் தன் குடும்பத்தினருடன் கடந்த பிப்ரவரி மாதம் 18 ம்தேதி வெளியூர் சென்றதாகவும் மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் பீரோவில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார்க்கு புகார் செய்தார் அதன்பேரில் தென்காசி மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் மற்றும் ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு உத்தரவின்படி, ஆழ்வார்குறிச்சி போலீசார் தென்காசி சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த தொடர் விசாரணையில் அதே ஊரைச்சேர்ந்த செல்வராஜ் (44) சங்கர் (37), முரசொலி செல்வம் (36) மற்றும் தங்கமணி (42) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 22 பவுன் தங்கம், 110 கிராம் வெள்ளி நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக போலீசார் அப்பகுதியில் செல்போன் சிக்னலை ஆராய்ந்தும், அதிகளவில் சொல்போனில் தொடர்பு கொண்டதை வைத்தும் போலீசார் அவர்களை பிடித்துள்ளனர், மேலும் அவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்காக இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் குற்றவாளியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே கிராமத்தில் உள்ளவர்கள் உல்லாசமாக வாழ்வதற்கு ஒன்றிணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ச.செந்தில், தென்காசி மாவட்டம் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.