Home /News /tamil-nadu /

கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகளுடன் வாழ வழியின்றி தவிக்கும் 85 வயது மூதாட்டி- உணவுக்குக் கூட கஷ்டப்படும் அவலம்

கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகளுடன் வாழ வழியின்றி தவிக்கும் 85 வயது மூதாட்டி- உணவுக்குக் கூட கஷ்டப்படும் அவலம்

தென்காசி மூதாட்டி

தென்காசி மூதாட்டி

தென்காசியில் மாற்றுத்திறனாளி மகளுடன் அரசு உதவிக்காக 85 வயது மூதாட்டி ஏங்கிநிற்கிறார்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கோகுலம் தெருவில் வசித்து வரும் மூதாட்டி உச்சிமாகாளி (85). இவரது கணவர் இறந்த நிலையில் மகள் மாரியம்மாள்(47) கண்பார்வை குறைபாடு ஏற்பட்ட நிலையில் சிறிது மனநலம் பாதிப்பு ஆளாகியதால் அவருக்கு திருமணம் ஆகவில்லை. அதனால், அவர் அவரது பெற்றோர்களுடன் வாழ்ந்துவருகிறார்.

இந்த நிலையில் தாய் உச்சிமாகாளிக்கு வயது முதிர்வு காரணமாக கூலிக்கு வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கிய நிலையில் இவர்களது வாழ்க்கை கேள்விகுறியாகியது. மூதாட்டிக்கு சொந்த வீடு கூட இல்லாத நிலையில் தூரத்து உறவினர் ஒரு சென்டில் இடம் கொடுத்ததாகவும் தற்போது அதில் வாழ்ந்துவருகின்றனர். இந்த நிலையில் அதையும் காலி செய்ய வற்புறுத்தி வருவதாகவும் ஒருவேளை உணவுக்காக எதிர்பார்த்து காத்து நிற்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார் மூதாட்டி.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளியான ராமராஜ் கூறும்போது, ‘மூதாட்டியான உச்சிமாகாளிக்கு உறவினர்கள் யாரும் கிடையாது எனவும் மேலும் தனது மகள் மாரியம்மாள் உடன் எப்போதும் இடியும் தருவாயில் உள்ள வீட்டில் ஒரு வேளை உணவுக்காக கூட அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்ந்து வருவதாகவும் என்னால் முடிந்த வரை நான் உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

சேலம் மேயருக்கு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரை அறிவித்த தி.மு.க- கட்சியினர் வரவேற்பு

மேலும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த மூதாட்டிக்கு உதவி செய்திட வேண்டும் எனவும் கண்பார்வையற்ற மகளுக்கு மருத்துவரின் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கிடவும் இதுவரை இந்த இருவரும் ரேஷன் அட்டை பெறாத நிலையில் இவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிடவும் முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கிடவும் வேண்டுகோள் விடுத்தார்.
Published by:Karthick S
First published:

Tags: Tenkasi

அடுத்த செய்தி