Home /News /tamil-nadu /

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக கட்டண வசூல் - விவசாயிகள் வேதனை

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக கட்டண வசூல் - விவசாயிகள் வேதனை

தென்காசி விவசாயி

தென்காசி விவசாயி

Tenkasi District : தினந்தோறும் சுமார் 1000 மூட்டைகளை மட்டுமே விவசாயிகளிடம் இருந்து வாங்குவதாகவும் அதன் பின்னர் சாக்குகள் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். இதற்கு மாறாக மொத்த நெல் வியாபாரிகள் கொண்டுவந்த நெல்லை மட்டும் இரவோடு இரவாக அளப்பதாகவும் அவர்களிடமிருந்து ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் வாங்குவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
    அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 50 முதல் 60 ரூபாய் வரை ஒரு மூட்டைக்கு வசூல் செய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் வடகரை சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பிசான சாகுபடியில் நெல் நடவு செய்தனர். தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய  ஆண்டுதோறும் அரசு ஒழுங்குமுறை விற்பனை நிலையம் மூலமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். அதன்படி  நேரடி நெல் கொள்முதல் வடகரை சென்னபொத்தை செல்லும் பகுதியில் நிலையம் திறக்கப்பட்டது.

    இதையடுத்து அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொண்டுவந்தனர். ஆனால், முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கொண்டுவந்த நெல் தேக்கம் அடைந்து ஏராளமான குவியல்களில் நெல்லை கொட்டி வைத்து, விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். நீண்ட நாட்களாக நெல்லை பாதுகாத்து வருவதால் தங்கள் சொந்த வேலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய பெருமக்கள் கூறுகின்றனர்.

    இதையும் படியுங்கள் : தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எங்கே? தென்காசியில் நான்குவழி சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு

    இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது 3 மாதம் கஷ்டப்பட்டு நெல் நடவு செய்து வனவிலங்குகள் மத்தியில் அதை பாதுகாத்து தற்போது நெல் அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைகாக கொண்டுவந்தோம். ஆனால் தினந்தோறும் சுமார் 1,000 மூட்டைகளை மட்டுமே விவசாயிகளிடம் இருந்து வாங்குவதாகவும் அதன் பின்னர் சாக்குகள் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.



    இதற்கு மாறாக மொத்த நெல் வியாபாரிகள் கொண்டுவந்த நெல்லை மட்டும் இரவோடு இரவாக அளப்பதாகவும் அவர்களிடமிருந்து ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் வாங்குவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.



    மேலும் விவசாயிகள் நேரடியாக கொண்டுவந்த நெல்லை அரசு நிர்ணயித்த தொகையை விட ஒரு மூட்டைக்கு 50 முதல் 60 ரூபாய் வாங்குவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.



    எனவே அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முறையாக விவசாயிகளின் நெல்லை அளப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாவட்டம் முழுவதும் தேங்கியுள்ள கொள்முதல் நிலையங்களில் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    ச.செந்தில், செய்தியாளர், தென்காசி மாவட்டம்


    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Farmers, Tenkasi

    அடுத்த செய்தி