Home /News /tamil-nadu /

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எங்கே? தென்காசியில் நான்குவழி சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எங்கே? தென்காசியில் நான்குவழி சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு

போராட்டத்தில் ஈடுபட தென்காசி விவசாயிகள்

போராட்டத்தில் ஈடுபட தென்காசி விவசாயிகள்

தமிழக அரசு தேர்தல் நேரத்தில் இந்த திட்டத்தை கைவிட்டு மாற்றுவழிபாதைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தது இதற்க்கு மாறாக மீண்டும் நான்குவழி சாலை திட்டத்தை தற்போது செயல் படுத்திதிட நிலத்தை அளவிடும் பணியை மேற்கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நான்குவழி சாலையை மாற்று பாதையில் செயல்படுத்த கோரி விவசாய அமைப்புகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மணிக்கூண்டு அருகே அனைத்து விவசாய அமைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் சாரதி தலைமையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ராஜபாளையம் முதல் புளியரை வரை (திருமங்கலம் - கொல்லம்) நான்கு வழி சாலை அமைக்க கடந்த மூன்று ஆண்டுக்கு முன்னர் அரசு அறிவித்தது இதற்க்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 1700 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் இந்த திட்டத்திற்க்கு பதிலாக மாற்று பாதையில் செயல்படுத்த கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    இதையும் படியுங்கள் :  விவசாயிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் – தென்காசியில் பரபரப்பு

     

    மேலும் தற்போதை அரசு தேர்தல் நேரத்தில் இந்த திட்டத்தை கைவிட்டு மாற்றுவழிபாதைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தது இதற்க்கு மாறாக மீண்டும் நான்குவழி சாலை திட்டத்தை தற்போது செயல் படுத்திதிட நிலத்தை அளவிடும் பணியை மேற்கொள்கின்றது.



    இதனை கைவிட வேண்டும் எனவும் விவசாய நிலங்களை பாதுகாத்திட கோரியும் எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதாகைகளை ஏந்தியவாறு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர் : ச.செந்தில், தென்காசி மாவட்டம்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி