Home /News /tamil-nadu /

'பெயரளவில் மட்டும் விவசாயி குறைதீர் கூட்டம்..குறைகளுக்கு எந்த தீர்வும் எடுக்கப்படுவதில்லை' - ஆட்சியர் மீது தென்காசி விவசாயிகள் குற்றச்சாட்டு

'பெயரளவில் மட்டும் விவசாயி குறைதீர் கூட்டம்..குறைகளுக்கு எந்த தீர்வும் எடுக்கப்படுவதில்லை' - ஆட்சியர் மீது தென்காசி விவசாயிகள் குற்றச்சாட்டு

விவசாயி குறைதீர் கூட்டம்

விவசாயி குறைதீர் கூட்டம்

Tenkasi District | தங்கள் குறைகளை தெரிவிக்க பல கிலோ மீட்டர் கடந்து வந்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை எனவும் அதிகாரிகள் விவசாயிகளின் குறைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஒற்றை வார்த்தை மட்டுமே பதிலாக வைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    தென்காசியில் பெயரளவில் மட்டும் விவசாயி குறைதீர் கூட்டம்  நடைபெறுவதாகவும், குறைகளுக்கு எந்த தீர்வும் எடுக்கப்படுவதில்லை எனவும் விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

    தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் குறைகளுக்கு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கூட்டம் தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் கடுமையாக உரதட்டுப்பாடு நிலவி வருகிறது. கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக கடன் பெற்ற விவசாயிகளுக்கு 10 சதவீதம் உரத்திற்காக பிடிமானம் செய்யப்பட்ட நிலையிலும் அதற்கான உரங்கள் மூன்று மாதங்கள் ஆகியும் வழங்கப்படவில்லை.



    ஆனால் இவை எதற்கும் பதில் அளிக்க மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் மறுத்துவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது  தங்கள் குறைகளை தெரிவிக்க பல கிலோ மீட்டர் கடந்து வந்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை எனவும் அதிகாரிகள் விவசாயிகளின் குறைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஒற்றை வார்த்தை மட்டுமே பதிலாக வைத்துள்ளனர். இதன் காரணமாக  தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் பெயரளவிலேயே நடைபெறுவதாக குற்றம் சாட்டினர்.

    ச.செந்தில், செய்தியாளர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி