Home /News /tamil-nadu /

தென்காசி : ரேசன் அரிசியை ஆட்டோவில் கடத்திய பணியாளர்... நடவடிக்கை கோரி எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

தென்காசி : ரேசன் அரிசியை ஆட்டோவில் கடத்திய பணியாளர்... நடவடிக்கை கோரி எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு சங்கத்தின் கீழ் பல்வேறு கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை ரகுமானியாபுரம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் இருந்த ரேசன் அரிசி மூட்டைகளை பெண் பணியாளர் இரவு ஆட்டோவில் ஏற்றி கடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை ரகுமானியாபுரம் பகுதியில் 02096.முத்துகிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கபட வேண்டிய ரேசன் அரிசி மூட்டைகளை கடையில் வைக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க : தென்காசி காவல்நிலைய வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய போலீசார்

    இதனை நேற்று இரவு அங்கு வந்த பெண் பணியாளர் கடையில் இருந்த ரேசன் அரிசி மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

    இந்த சம்பவ காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாக வந்ததை தொடர்ந்து இதனை கண்டிக்கும் விதமாக அப்பகுதி சேர்ந்த மக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் திரண்டு ரேசன் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரப்பரப்பாக காணப்பட்டது.

    இதையும் படிங்க : மாமியாரை தரக்குறைவாக பேசிய மருமகனை வெட்டி கொன்ற மாமனார்: திருமணமாகி 6 மாதத்தில் நடந்த துயரம்!

    மேலும் இந்த கூட்டுறவு சங்கத்தின் கீழ் பல்வேறு கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதும் அதன் காட்சிகள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வரக்கூடிய சூழ்நிலையில் மீண்டும் இதே போன்று வீடியோ தற்போது மக்களுக்கு வழங்கக்கூடிய அரிசிகளை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே உடனடியாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : ச. செந்தில்
    Published by:Musthak
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி