Home /News /tamil-nadu /

குற்றாலத்தில் குறைந்தது நீர்வரத்து... ஏமாற்றத்தோடு திரும்பும் சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் குறைந்தது நீர்வரத்து... ஏமாற்றத்தோடு திரும்பும் சுற்றுலா பயணிகள்

 குற்றால அருவி

குற்றால அருவி

Tenkasi District : கோடை வெப்பத்தைத் தணிக்க அருவியில் குளிக்க ஆவலுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் பாறையை ஒட்டி குறைவான நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரபகுதியில் உள்ள குற்றால அருவிகள்பாறையை ஒட்டிகுறைவான நீர் வரத்தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து வெப்பத்தின் அளவு மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

    மதிய நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது மேலும்ஒரு சில இடங்களில் லேசான கோடை மழை பெய்தாலும் வெப்பத்தை தணிக்கும் அளவுக்கு மழை பெய்யாததால் அனல் காற்று வீசுகிறது. வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கோடை மழை பெய்யுமா என்ற ஏக்கத்துடன் பொதுமக்கள் உள்ளனர்.


    இந்த நிலையில் சுற்றுலாத் தலமான பிரதான அருவியாத குற்றால மெயின் அருவியில்பாறையை ஒட்டி குறைவான நீர்வரத்து வருவதால் ஆண்களும் பெண்களும் ஒரே வரிசையில் நின்று குறைவான தண்ணீரில் குளித்து செல்கின்றனர்.

    ALSO READ |  'தொழில்நுட்பம் இருந்தால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை யாராலும் அசைக்க முடியாது' - அகில இந்திய பொது செயலாளர் பேட்டி
     மேலும் புலியருவி நீரின்றி வறண்டு காணப்படுகிறது. ஐந்தருவியில்  2 கிளையில் மட்டும் பாறையை ஒட்டியபடி சிறிதளவு நீர் வந்தது வார விடுமுறையான இன்று வந்த  சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அருவியில் குளித்தனர். கோடை வெப்பத்தைத் தணிக்க அருவியில் குளிக்க ஆவலுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.




    ச.செந்தில், செய்தியாளர், தென்காசி மாவட்டம்

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Courtallam, Tenkasi

    அடுத்த செய்தி