Home /News /tamil-nadu /

ஹிஜாப் அணிந்த தேர்தல் அதிகாரியிடம் வெற்றி சான்றிதழ் பெற்ற பாஜக வேட்பாளர் - தென்காசியில் சுவாரஸ்யம்

ஹிஜாப் அணிந்த தேர்தல் அதிகாரியிடம் வெற்றி சான்றிதழ் பெற்ற பாஜக வேட்பாளர் - தென்காசியில் சுவாரஸ்யம்

hijab

hijab

HIJAB: அன்று எந்த ஹிஜாப்பை கழற்ற வேண்டும் என பாஜக முகவர் தகராறு செய்தாரோ, இன்று அதே ஹிஜாப் அணிந்த பெண்ணின் கையால் பாஜகவை சேர்ந்தவர் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

    தென்காசி நகராட்சியில் ஹிஜாப் அணிந்த பெண் தேர்தல் அதிகாரியிடம் பாஜக வேட்பாளர் தனது வெற்றிச்சான்றிதழை பெற்ற ருசிகர நிகழ்ந்து நடந்துள்ளது. அதேபோல் பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணன், தங்கை, அடுத்தடுத்த வார்டுகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

    தமிழகத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி அன்று நடைபெற்றது அதன்படி தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சி, 17 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தேர்தலின் போது மதுரை மாவட்டம் மேலூரில் ஹிஜாப்பிற்கு எதிராக பாஜக முகவர் ஆர்ப்பாட்டம் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தென்காசி நகராட்சி ஆணையராக இஸ்லாமிய சமூகத்த சேர்ந்த பெண் அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இந்த பெண் அதிகாரி ஹிஜாப் அணிந்தபடி பணியாற்றியனர். அந்த அதிகாரியிடம் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் சான்றிதழை பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

    தென்காசி நகராட்சியில் 8-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்னம்மாள் கவுன்சிலராக வெற்றிபெற்றிருக்கிறார். இதற்கான வெற்றிச்சான்றிதழை அவர் பெற்ற நிகழ்வு தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹிஜாப் அணிந்த அதிகாரியிடம் வெற்றி சான்றிதழ் பெறும் பாஜக கவுன்சிலர்


    கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு எதிராக அண்மையில் மாணவர்கள் சிலர் செய்த அலப்பறைகளை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மேலூரில் பாஜக முகவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து ஓட்டளிக்க வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் மேலும்ஹிஜாப்பை கழற்றிவிட்டு வாக்களிக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்ததோடு வாக்குச்சாவடி மையத்திற்குள் பெரும் குரல் எழுப்பி வாக்குவாதமும் செய்தார்.

    இந்த நிலையில்தென்காசி நகராட்சியில் ஹிஜாப் அணிந்த பெண் தேர்தல் அதிகாரியான பிர்ஜானிடம் சத்தமின்றி வெற்றிச் சான்றிதழை வாங்கிச் சென்றிருக்கிறார் பாஜக கவுன்சிலர் பொன்னம்மாள் வெற்றி பெற்ற செய்தியை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகின்றது. அன்று எந்த ஹிஜாப்பை கழற்ற வேண்டும் என பாஜக முகவர் தகராறு செய்தாரோ, இன்று அதே ஹிஜாப் அணிந்த பெண்ணின் கையால் பாஜகவை சேர்ந்தவர் சான்றிதழ் பெற்றிருக்கிறார். இதனைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    பாஜக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள்


    மேலும் கடையநல்லூர் நகராட்சியில் 1 வது வார்டில் கர்ப்பிணி பெண்ணாக போட்டியிட்ட ரேவதி பாலீஸ்வரர் தேர்தலில் வாக்களிக்காமலே வெற்றி பெற்றுள்ளார். மேலும் தென்காசி நகராட்சியில் 14வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட சீதா லெட்சுமி, 15வது வார்டில் போட்டியிட்ட சங்கரசுப்பிரமணியன் ஆகிய அண்ணன் தங்கை இருவரும் வெற்றி வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

    ச.செந்தில், ( செய்தியாளர் - தென்காசி )
    Published by:Arun
    First published:

    Tags: BJP, Hijab, Local Body Election 2022, Tenkasi

    அடுத்த செய்தி