Home /News /tamil-nadu /

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர்கள் போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் போராட்டம்

Tenkasi District : அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த முன்வர வேண்டும் எனக்கூறி 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ரமேஷ் மற்றும் முருகையா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தற்போதைய திமுக அரசு  சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வுதிய திட்டதை அமல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.



    அதன்படி அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் எனக்கூறி 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையும் படியுங்கள் : 'குடிநீர், கழிவறை, வகுப்பறை வசதி வேண்டும்' - தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

    மேலும் வருகின்ற மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பொதுவேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் போராட்டத்தில் தெரிவித்தனர்.

    ச.செந்தில், செய்தியாளர், தென்காசி 
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி