Home /News /tamil-nadu /

கோவில் நிலம் என அளவிட வந்த அறநிலைய துறை அதிகாரிகள்.. கிராம மக்கள் எதிர்ப்பு

கோவில் நிலம் என அளவிட வந்த அறநிலைய துறை அதிகாரிகள்.. கிராம மக்கள் எதிர்ப்பு

வெகுண்டெழுந்த கிராம மக்கள்

வெகுண்டெழுந்த கிராம மக்கள்

Tenkasi District : கோவிலுக்கு சொந்தமான நிலம் என கூறி அளவிட அதிகாரிகள் வந்ததால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

    தென்காசி மாவட்டம் சில்லரைபுரவு முத்துமாலைபுரம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இந்த இடத்தை இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருமலைக்குமாரசுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடம் 53 ஏக்கர் இருப்பதாக கூறி நிலத்தை அளவிட வந்த அதிகாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் 44,218 கோயில்கள் உள்ளன. இந்து அறநிலையத்துறை தமிழக அரசின் கீழ் இயங்கி வருகின்றது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் சில்லறை புரவு முத்துமாலைபுரம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட வேலப்பனூர், காக்கையனூர், குறுக்கிட்டானூர், காமராஜ்நகர், இந்திரா காலணி, ஆகிய 6 சிறு கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டு காலமாக வாழ்ந்துவருகின்றனர்.



    இந்த நிலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருமலை குமாரசாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடம் 53 ஏக்கர் நிலம் இந்த பகுதியில் உள்ளதாகவும், இந்து அறநிலை துறை அதிகாரிகள் பொய்யான ஆதாரத்தோடு ஆதாரம் இல்லாத வாய்மொழி தகவலைக் கொண்டு அதிகாரிகள் கிராம மக்களுக்கு கோவில் தீர்வை ரசீது கட்ட வேண்டுமென நிர்ப்பந்தம் செய்து நிலத்தை அளவீடு செய்வதாக கூறி, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ALSO READ |  Explainer | இந்து சமய அறநிலையத்துறை எப்படி செயல்படுகிறது?
     

    இது தொடர்பாக கிராம மக்கள் கூறும்போது கடந்த 2007ஆம் ஆண்டு கோவில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஊர் மக்கள் சார்பாக பூர்வகுடி மக்கள் எனக் கூறி நீதிபதி இவ்வழக்கை கோயில் நிர்வாகத்திற்கு தகுந்த ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்த நிலையில்  தற்போது இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நிலத்தை மீண்டும் அளவிட வந்த நிலையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத்தில் கூடிய பொதுமக்கள் காவல்துறை அதிகாரியுடன் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது.

     ச.செந்தில், செய்தியாளர், தென்காசி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி