முழு ஊரடங்கு: தென்காசியில் சாலையோரங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய போலீசார்!

உணவு வழங்கிய போலீசார்

முழு ஊரடங்கு காரணமாக தென்காசியில் வெறிச்சோடி காணப்பட்ட சாலையோரங்களில், இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு போலீசார் உணவு பொட்டலங்களை வழங்கினர்.

 • Share this:
  முழு ஊரடங்கு காரணமாக தென்காசியில் வெறிச்சோடி காணப்பட்ட சாலையோரங்களில், இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு போலீசார் உணவு பொட்டலங்களை வழங்கினர்.

  தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து இருந்தது மேலும் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமை பொது ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

  முதல் ஞாயிற்றுகிழமை ஊரடங்கான இன்று தென்காசி நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் சாலையோரங்களில் ஆதரவற்ற முதியோர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் உணவு பொட்டலங்கள் வழங்கினர். காவல் துறையின் இச்செயலுக்கு ஆதரவற்ற முதியோர்கள் தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

  மேலும் ஊரடங்கில் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க  800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  மாவட்ட எல்லை பகுதிகளில் 9 சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
  மருத்துவர்கள், செவிலியர்கள், கொரோனா முன் கள பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக சென்றவர்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதியளித்தனர்.

  அதே போல் தேவையின்றி வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அதை மீறி மீண்டும் வருபவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

  செய்தியாளர் - ச.செந்தில்
  Published by:Esakki Raja
  First published: