தென்காசி மாவட்டம் புளியங்குடி ,சொக்கம்பட்டி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சிங்கிலிபட்டி, உள்ளிட்ட ஊர்களில் பிரதான தொழிலாக எலுமிச்சைபழம் விவசாயம் செய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் ஒரு பழம் ரூபாய் 2 முதல் 5 வரை விற்பனை ஆனது. தற்போது தொடர் கோடை வெயில் தாக்கத்தால் விற்பனை சூடுபிடித்து கிலோ ஒன்றுக்கு 200 முதல் 220 வரை விற்பனையாகின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்துக்களின் கோவில் விழாக்கள் மட்டுமின்றி வீடுகளின் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் முக்கிய இடம் பெறுவது எலுமிச்சை பழமாகும். தென்காசி, புளியங்குடி வட்டார பகுதிகளில் எலுமிச்சை செடிகள் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு மகசூல் பெறப்படும் எலுமிச்சை பழங்கள் நெல்லை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சென்னை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை சூடுபிடித்து வருவதாகவும் இதனால் விவசாய மக்களாகிய நாங்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் விவசாயிகளுக்கான இடுபொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலையேற்றம் இதுகுறித்து வியாபாரிகள் கூறும் போது தற்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்த பகுதிகளில் விளைச்சல் குறைவாக உள்ளது எனவும் இதனால் தற்போது ஒரு கிலோ பழங்களின் விலை 200 ரூபாய் விலை 220 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்ததால் பூக்கள் உதிர்ந்ததால் தற்போது வரத்து குறைந்துள்ளது. இதனாலும் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மொத்தத்தில் தற்போது எலும்பிச்சை பழத்தின் வரத்து குறைந்து இருந்தாலும் விலை அதிகரித்துள்ளதால் இப்பகுதி விவசாய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ச.செந்தில், செய்தியாளர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmers, Lemon, Summer Heat, Tenkasi