4 ஆண்டாக ஒருதலைக்காதல்... பெண் காதலிக்க மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்த மாணவன் கைது
4 ஆண்டாக ஒருதலைக்காதல்... பெண் காதலிக்க மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்த மாணவன் கைது
ஒருதலைக்காதல்
Tenkasi District : ஒரு பெண்ணை கடந்த நான்கு வருடமாக ஒருதலைப்பட்சமாக காதலித்து வருவதாகவும் அந்தப் பெண்ணிடம் கடந்த 18ம் தேதி நேரில் சென்று தன்னை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஒரு தலையாக காதலித்து வந்த மாணவன் தனது காதலை ஏற்காத பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது. தற்போது மாணவன் தென்காசி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள குமந்தாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் கணேஷ்பாபு (21) இவர் நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த நான்கு வருடமாக ஒருதலைப்பட்சமாக காதலித்து வருவதாகவும் அந்தப் பெண்ணிடம் கடந்த 18ம் தேதி நேரில் சென்று தன்னை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் அந்தப் பெண் காதலிக்க மறுத்ததால் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததாகவும் அவதூறு வார்த்தைகளால் திட்டியதாக அந்த பெண் வீட்டிற்க்கு சென்று தனது பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து அவர்கள் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதன் பெயரில் போலீசார் வழக்குபதிவு செய்து கல்லூரி மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ச.செந்தில், செய்தியாளர், தென்காசி மாவட்டம்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.