Home /News /tamil-nadu /

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம் ... திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம் ... திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம்

சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம்

Sri Sankaranarayana Swamy Temple Sankarankovil : சங்கரன்கோவில் அருள்மிகு. சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா  ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள உலகப் பிரசித்தி பெற்றதும் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் 2  ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா  கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சங்கரன்கோவில் அருள்மிகு. சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா  ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரபீடத்தில் பால், பன்னீர், விபூதி, சந்தனம், உள்ளிட்ட 16 வகை முலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார ஆராதனைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.



    இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் சுவாமி, அம்பாள் ரதவீதி சுற்றி வந்தனர். அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் நின்று சுவாமி , அம்பாளை தரிசித்தனர். இவ்விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையதுறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.

    செய்தியாளர் : ச.செந்தில்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி