Home /News /tamil-nadu /

தென்காசியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி : 76 மாணவ மாணவிகள் பங்கேற்பு

தென்காசியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி : 76 மாணவ மாணவிகள் பங்கேற்பு

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

Tenkasi District : இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் சிறப்பு பரிசுகளை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநில சிறுபான்மை ஆணையம் சார்பாக  தென்காசியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார்.

    தமிழகத்தில் தனியார் பள்ளி கல்லூரிக்கு இணையாக அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் வாழ்வில் முன்னேறவும் பல்வேறு வகையில் தமிழக அரசு தற்போது செயலாற்றி வருகிறது. அந்த வகையில் தமிழக முதலமைச்சர் நிமிரும் தமிழகம் என்ற இலட்சியத்தை தமிழக கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தமிழகத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளில் மாணவர்களுக்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில்  உள்ள ஜேபி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் 76 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது தமிழ் மொழியின் தொன்மையும் அதன் சிறப்புகளையும் எடுத்துரைத்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெற்றி சான்றிதழை வழங்கினார் மேலும் இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் சிறப்பு பரிசுகளை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த போட்டியின்போது சிறுபான்மைத் துறையின் ஆணைய தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி மாநில ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன் மற்றும் திரளான ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    ச.செந்தில், செய்தியாளர், தென்காசி மாவட்டம்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: DMK, MK Stalin, Tenkasi

    அடுத்த செய்தி