தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரைத் திருவிழாவில் சுவாமி - அம்பாள் திருத்தேரோட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலும் ஒன்றாகும். இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக 10 நாட்கள் நடைபெறும். இவ்விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலை சங்கரநாராயணசுவாமி - கோமதி அம்பாள் பல்வேறு அலங்காரங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று சங்கரநாராயணசுவாமி - அம்பாள் ஆகிய இருவரும் அலங்கரிக்கப்பட்ட இரண்டு தேர்களில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடைபெற்றது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் நடை பெறுவதால் தென்காசி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் பெற்றனர். இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளும் கட்டளைத் அவர்களும் செய்திருந்தனர்.
செய்தியாளர் : ச.செந்தில்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.