தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாட்டில் ஒருபோதும் காவி வர முடியாது. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகின்றது என கூறியுள்ளார்.
மேலும் நீட் தேர்வு குறித்து பேசிய அவர், தமிழக மாணவர்கள் இனி மருத்துவம் படிக்க முடியாது. நீட் தேர்வை மாநிலத்தில் இருந்து நீக்கிட தற்போதைய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழக கவர்னர் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளார். அவரை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே பொதுக்கூட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், மதிமுக மாநில துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளானோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ச.செந்தில், செய்தியாளர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.