Home /News /tamil-nadu /

தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

Tenkasi District : இந்த தர்ணா போராட்டத்தின்போது தென்காசி மாவட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

    தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி தலைமையில் மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த தர்ணா போராட்டத்தின்போது சங்கத்தின் முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மீது இலக்கு நிர்ணயிப்பது, பிற துறைப் பணிகளை திணிப்பது, போதிய கட்டமைப்பின்றி பணி நெருக்கடிகளை ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும்.



    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிர்வாக நிதியை தாமதமின்றி வழங்க வேண்டும். அலுவலக நேரம் கடந்த பின்பு நடைபெறும் ஆய்வுக் கூட்டங்கள், இரவு நேர ஆய்வுக் கூட்டங்களை கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.



    இந்த தர்ணா போராட்டத்தின்போது தென்காசி மாவட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் .



    மேலும் சிறப்பு அழைப்பாளர்ராக தமிழ்நாடு சமூகநலத்துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் துரைசிங், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் ராஜசேகரன், கங்காதரன், ராமநாதன் மார்த்தாண்டபூபதி, முருகன், கோவில்பிச்சை, கருப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ச.செந்தில், செய்தியாளர், தென்காசி மாவட்டம்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி