Home /News /tamil-nadu /

சுட்டெரித்த சூரியன்.. மக்களை மகிழ்விக்க சூறைக்காற்றோடு வந்த மழை

சுட்டெரித்த சூரியன்.. மக்களை மகிழ்விக்க சூறைக்காற்றோடு வந்த மழை

சூறாவளி காற்றுடன் மழை

சூறாவளி காற்றுடன் மழை

Tenkasi District : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மாலை 5 மணி முதல் சாரல் மழை பெய்யத் துவங்கியது. இந்த மழை நேரமாக ஆக பலத்த சூறைக் காற்றுடன் மழையாக பெய்தது.

    தென்றலுக்கும், இயற்கைக்கும் பெயர்போனது தென்காசி மாவட்டம். இயற்கையோடு அமைந்த வாழ்விடம் இங்கிருக்கும் மக்களுக்கு இன்பம் தருகின்றது. எனினும் கோடை வெயில் சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களை பதம் பார்த்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நீண்டநாட்களுக்குப் பிறகு இன்று சூறாவளி காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை முதலே வழக்கம்போல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் மேகம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ALSO READ | உல்லாசமாக வாழ ஒன்று கூடி கொள்ளையடித்த திருடர்கள் ... கையும், களவுமாக பிடித்த போலீஸார்

    இதனையடுத்து மாலை 5 மணி முதல் சாரல் மழை பெய்யத் துவங்கியது. இந்த மழை நேரமாக ஆக பலத்த சூறை காற்றுடன் மழையாக பெய்தது. இதனால் தற்போது ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு புல் வளரும் என்பதால் விவசாய மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ச.செந்தில், செய்தியாளர், தென்காசி 
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி