தேர்தலை ரத்து செய்யவேண்டும்: குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தவேண்டும் - புதிய தமிழகம் கட்சி போராட்டம்

தேர்தலை ரத்து செய்யவேண்டும்: குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தவேண்டும் - புதிய தமிழகம் கட்சி போராட்டம்

புதிய தமிழகம்

தமிழகத்தில் மறுதேர்தல் நடத்தக்கோரி புதிய தமிழகம் கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அதனையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் வாக்கு எண்ணிக்கையின் போது கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் இன்பராஜ் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இது ஜனநாயக படுகொலை. எனவே மே 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ரத்து செய்து விட்டு, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை 6 மாதம் முதல் 1 வருடம் வரை பிரகடனப்படுத்திட வேண்டும். கட்சி நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: