முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தென்காசியில் துணிகரம்...செல்போன் கடையில் துளையிட்டு 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் கொள்ளை

தென்காசியில் துணிகரம்...செல்போன் கடையில் துளையிட்டு 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் கொள்ளை

செல்போன் கொள்ளை

செல்போன் கொள்ளை

Tenkasi District | சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தும், கைரேகை தடயங்களை சேகரித்தும் செல்போன் கொள்ளையனை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

புளியங்குடியில் செல்போன் கடையில் துளையிட்டு 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி காலடி தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (44). இவர் புளியங்குடி பேருந்து நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று திருச்சி வணிகர் சங்க மாநாட்டிற்கு  சங்க நிர்வாகிகளுடன் சென்றதால் கடை பகலில் அடைக்கப்பட்டிருந்தது. பின்னர் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இன்று கடையை திறக்கும் போது கடையின் உள்பக்கம் துளையிட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையின் ஊழியர்கள் இதுகுறித்து நாகராஜனுக்கும் புளியங்குடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்தபோலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரொக்க பணம் 6,500 கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தும், கைரேகை தடயங்களை சேகரித்தும் கொள்ளையனை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் செல்போன் கடையில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 ச.செந்தில், செய்தியாளர், தென்காசி மாவட்டம்

First published:

Tags: Tenkasi