Home /News /tamil-nadu /

பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம்.. விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்

பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம்.. விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்

விழிப்புணர்வு ஏற்படுத்திய தென்காசி உதவி காவல் ஆய்வாளர் முக கவசம் அணிந்து வரவில்லை என்றால் அபதாரம் விதிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.

    கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தென்காசியில் உதவி காவல் ஆய்வாளர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.

    தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அரசு அறிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு தென்காசி உதவி காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டியன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும், மேலும் முக கவசம் அணிவதால் நோய்தொற்றில் இருந்து நம்மை தற்காத்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர் முக கவசம் அணிந்து வரவில்லை என்றால் அபதாரம் விதிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.

    மேலும் தென்காசி நகராட்சி சுகாதாரதுறை சார்பில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபதாரம் விதிக்கப்பட்டு முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    செய்தியாளர் - ச.செந்தில்,

    Also read: திருச்சி மத்திய சிறையில் உயர்ரக பாதுகாப்பு பிரிவில் ராஜேந்திர பாலாஜி அடைப்பு

    Published by:Esakki Raja
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி