Home /News /tamil-nadu /

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் அணிந்தவாறு பெண் குழந்தைகள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் சார்பில் குழந்தைகள் தேசிய கொடியை ஹிஜாப் அணிந்தவாறு 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்றத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றது

    அந்த வகையில் நேற்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் தலைமையில் மாநில செயலாளர் அப்துல் பாசித் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக கோஷங்கள் எழுப்பியவாறு தேசிய கொடியே ஹிஜாப் அணிந்தவாறு பெண் குழந்தைகள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஏடிஎஸ்பி ராஜேந்திரன் டிஎஸ்பி கணேசன் பொன்னரசு தலைமையிலான 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது.

    ச.செந்தில், செய்தியாளர், தென்காசி மாவட்டம்

    Published by:Musthak
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி