தென்காசியில்,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை போன்ற அத்தியாவசிய தேவைகளின் விலை வரலாறு காணாத அளவில் தினந்தோறும் ஏறிக்கொண்டே வருகிறது. மேலும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்தை கண்டித்து பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், 100 க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறும் பெண்கள் ஒப்பாரி பாடல் பாடி கும்பி அடித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது.
செய்தியாளர் : ச.செந்தில் ( தென்காசி)
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.