பள்ளியில் மாணவனை முழங்கால் போடவைத்ததில் காலில் காயம்... ஆசிரியர் மீது பெற்றோர் புகார்
பள்ளியில் மாணவனை முழங்கால் போடவைத்ததில் காலில் காயம்... ஆசிரியர் மீது பெற்றோர் புகார்
முழங்காலில் காயமடைந்த பள்ளி மாணவன் ஸ்ரீ ஹரிஷ்
மாணவன் சிறுநீர் கழிக்க வேண்டும் என கேட்கவே அதற்க்கு வகுப்பு ஆசிரியர் நீ சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் 10 நிமிடத்திற்க்குள் வரவேண்டும் இல்லையெனில் முழங்கால் போடவேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தனியார் பள்ளியில் மாணவனை முழங்கால் போட வைத்ததில், மாணவனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஜீவா மாண்டிச்சேரி தனியார் பள்ளியில் 1,200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது மாணவன் ஒருவன், சிறுநீர் கழிக்க வேண்டும் என கேட்கவே அதற்கு வகுப்பு ஆசிரியர் நீ சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் 10 நிமிடத்திற்க்குள் வரவேண்டும் இல்லையெனில் முழங்கால் போடவேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சிறுநீர் கழிக்க சென்ற 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புக்கு திரும்பிவரும் போது ஆங்கில ஆசிரியர் முழங்கால் போட வைத்துள்ளார். இதில் பள்ளி மாணவன் ஸ்ரீ ஹரிஷ்க்கு (12) காலில் காயம் ஏற்பட்டது. இதனை கண்ட தாய் அருகில் உள்ள மருத்துமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்.
முழங்காலில் காயமடைந்த பள்ளி மாணவன் ஸ்ரீ ஹரிஷ் இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீஹரிஷ் தாய் முத்து லெட்சுமி ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
ஆசிரியர் - மாணவர்கள் மோதல் தொடர் செய்திகளாகிவரும் நிலையில் தற்போது இந்த விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் -ச.செந்தில்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.