Home /News /tamil-nadu /

தடுப்பூசி சான்றிதழ் அவசியம்.. கட்டாய கொரோனா பரிசோதனை.. தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை

தடுப்பூசி சான்றிதழ் அவசியம்.. கட்டாய கொரோனா பரிசோதனை.. தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை

தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் இருந்து வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும் எனவும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தென்காசி மாவட்டம் தமிழக- கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வரும் பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்கும் பயணிகள்  மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக அதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் அத்தியாவசியமான பொருள்களான பால் காய்கறி மற்றும் கட்டுமான பொருட்கள் இவ்வழியாக கொண்டு செல்கின்றனர்.

    Also Read: தடுப்பூசி போடாதவர்கள் வெளியே நடமாட தடை.. புதுச்சேரி அரசு உத்தரவு

    மேலும் பேருந்து இயக்கத்தால் பொதுமக்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் தினசரி ஆயிரகணக்கான மக்கள் சென்று வருகின்றனர்.
    தற்போது ஒமைக்ரான் என்னும் புதிய நோய்த்தொற்று தமிழகத்திற்குள் பரவாமல் இருப்பதற்கு தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Also Read:  தங்கம்.. முதலீடு.. சொத்து குவிப்பு - சூப்பர் சரவணா ஸ்டோர் ஐடி ரெய்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

    கொரோனா நோய்த்தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விளக்கும் விதமாகவும் புளியரை சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும் எனவும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்து தற்போது தமிழகத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  தொடர்ந்து சுகாதார துறையினரும் காவல்துறையினரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

     செய்தியாளர்:  ச.செந்தில் ( தென்காசி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Corona, Corona spread, Corona Vaccine, Covid-19, Covid-19 vaccine, Kerala, Tamil News, Tamilnadu

    அடுத்த செய்தி