ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தென்காசியில் முதியவர் அடித்துக் கொலை... பிரேதப் பரிசோதனையில் அரசு மருத்துவமனை அலட்சியம் - உறவினர்கள் குற்றச்சாட்டு

தென்காசியில் முதியவர் அடித்துக் கொலை... பிரேதப் பரிசோதனையில் அரசு மருத்துவமனை அலட்சியம் - உறவினர்கள் குற்றச்சாட்டு

தென்காசியில் முதியவர் அடித்துக் கொலை

தென்காசியில் முதியவர் அடித்துக் கொலை

Tenkasi District | குளிர்பதனம் முறையாக வைக்காமல் மருத்துவமனை நிர்வாகம்  அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. இது குற்றவாளிகளுக்கு சாதமாக அமையும் எனவும் முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தென்காசியில் கொலை செய்யப்பட்ட முதியவரின் உடல் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறு செய்ய வைக்கப்பட்ட நிலையில் குளிர்பதன வசதி இல்லாததால் உடல் அழுகி சேதமடைந்ததால் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள மாந்தோப்பில் முதியவர் கோட்டை மாடன் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை குற்றாலம் காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே உடற்கூறு பரிசோதனை நேற்று செய்யப்படாத நிலையில் உடல்  பதப்படுத்தாமல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இன்று உடற்கூறு பரிசோதனைக்கு முன்னரே கோட்டை மாடன் உடல் அழுகிய நிலையில்  காணப்பட்டுள்ளது. இதனால் உடலை திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கோட்டை மாடன் உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து திடீரென தென்காசி புதிய பேருந்துநிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோட்டை மாடன் உறவினர் கூறுகையில், கோட்டை மாடன் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் 9 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முறையாக செய்வதன் மூலம் அதில் கிடைக்கும் தடயங்களை சேகரிக்க மருத்துவர்கள் தவறவிட்டு விட்டனர்.

அவரின் எதிரிகள் அவரை அடித்து தோட்டத்தில் கொன்று போட்டுள்ளனர். அவரின் கழுத்தில் ஒரு விரல் அளவு காயம் உள்ளது. வாயில் கட்டையை வைத்து அடித்து அவரது பல் போய் விட்டது. மண்டையில் அடித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் வைத்துள்ளோம். இங்கு குளிர்பதனம் பெட்டி (freezer) எதுவும் கிடையாது. உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றது.

இதுகுறித்து  கேட்டால் உடல் அழுகிவிட்டது. திருநெல்வேலி கொண்டு செல்லுங்கள் என கூறுகின்றார்கள். எப்படி இதுபோன்ற ஆனது என எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும். அழுகிவிட்டது என்றால் freezer வேலை செய்ய வில்லை என கூறுகின்றனர். வேலை செய்யவில்லை என்றால் மருத்துவமனை DM இங்கு என்ன செய்து கொண்டு உள்ளார். இது கொலை என்பது உறுதியாகி உள்ளது. உடலில் 9 இடத்தில் காயம் உள்ளது. மாட்டிக் கொள்வோம் என்பதால் DM மும் , போலீசும் மறைக்க பார்க்கின்றார்கள்.

ALSO READ |  சேக்காடு ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்... சட்டவிரோதமாக ஏரியில் கழிவு நீர் திறப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

இது குற்றவாளிகளுக்கு சாதமாக அமையும் எனவும் முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது பின்னர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

 செய்தியாளர் : ச.செந்தில் (தென்காசி )

First published:

Tags: Tenkasi