Home /News /tamil-nadu /

கோடையிலும் கொட்டும் பழைய குற்றால அருவி... குதூகலமாய் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

கோடையிலும் கொட்டும் பழைய குற்றால அருவி... குதூகலமாய் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

கோடையிலும் கொட்டும் பழைய குற்றால அருவி

கோடையிலும் கொட்டும் பழைய குற்றால அருவி

Coutrallam Falls | வெயில் தாக்கம் அதிகரித்த நிலையில் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்த நிலையில் பழைய குற்றால அருவியில் மட்டும் மிதமாக தண்ணீர் விழுகின்றது.

    சுட்டெரிக்கும் வெயிலில் பழைய குற்றால அருவியில் கோடையிலும் தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குதூகலமாய் ஆனந்த குளியல் போட்டுச் செல்கின்றனர்.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும் இந்த சீசனை அனுபவிப்பதற்கு உலகத்தில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் மேலும் ஆர்ப்பரித்து வரும் அருவிகளில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு உத்தரவின் பேரில் அருவியில் குளிப்பதற்கு நிபந்தனையுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.



    இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பிரதான அருவி, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவிகளில் நீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர்.



    கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் பழைய குற்றாலம், குற்றால மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து துவங்கியது

    தற்போது சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் அதிகரித்த நிலையில் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்த நிலையில் பழைய குற்றால அருவியில் மட்டும் மிதமாக தண்ணீர் விழுவதால் இன்று வாரவிடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இருப்பினும் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்து செல்வதாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ச.செந்தில், செய்தியாளர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Courtallam, Tenkasi

    அடுத்த செய்தி