Home /News /tamil-nadu /

அரசு மருத்துமனையில் சமூகநலத்துறை சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி

அரசு மருத்துமனையில் சமூகநலத்துறை சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி

ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி

ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி

Tenkasi District : குழந்தைகள் வளர் இளம் பெண்கள் , கர்ப்பிணிகள் , பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து நல கல்வியும் கண்காட்சியின் மூலம் அரசு மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களிடமும் தெளிவாக விளக்கப்பட்டது.

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வாளாகத்தில் மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் வெங்கட ரங்கன் முன்னிலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா ஆகியோர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இந்த கண்காட்சியில் தென்காசி , செங்கோட்டை , கடையநல்லூர் , ஆலங்குளம் , கீழப்பாவூர் உள்ளிட்ட 6 வட்டாரத்திலுள்ள குழந்தைகள் மைய ( அங்கன்வாடி ) பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு சிறு தானியங்கள் மூலமும் பல்வேறு வகையான உணவு பொருட்கள் தயார் செய்து வைத்தனர்

    மேலும் இயற்கையான காய்கறிகள் , கீரைகள் , பழங்கள் பயறு வகைகள் மூலம் கிடைக்கப்பெறும் ஊட்டச்சத்துக்கள் பற்றி மக்களுக்கு தெளிவாக புரியும் வகையில் கண்காட்சியில் வைக்கப்பட்டது.



    குழந்தைகள் வளர் இளம் பெண்கள் , கர்ப்பிணிகள் , பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து நல கல்வியும் கண்காட்சியின் மூலம் அரசு மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களிடமும் தெளிவாக விளக்கப்பட்டது.



    நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடில்லா சமுதாயத்தினை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது ,
    இந்நிகழ்ச்சியினை தென்காசி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி தான்யா , மேற்பார்வையாளர் மற்றும் திட்ட உதவியாளர் திருமதி அஞ்சுகம் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ச.செந்தில், செய்தியாளர், தென்காசி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி