'தொழில்நுட்பம் இருந்தால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை யாராலும் அசைக்க முடியாது' - அகில இந்திய பொது செயலாளர் பேட்டி
'தொழில்நுட்பம் இருந்தால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை யாராலும் அசைக்க முடியாது' - அகில இந்திய பொது செயலாளர் பேட்டி
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க அகில இந்திய பொது செயலாளர்
Tenkasi District : இந்திய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழிநுட்பத்தை உயர்த்த முன்வர வேண்டும் என பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க அகில இந்திய பொது செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் தொழிட்நுட்ப வசதி இருந்தால் யாராலும் அசைக்க முடியாது, ஆனால் இந்திய அரசு அதற்கு தடையாக இருப்பதாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க அகில இந்திய பொது செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்கள் 9வது தமிழ் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் அபிமன்யு கூறுகையில், தென்காசியில் தனியார் மண்டபத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் 9வது தமிழ் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் மையமாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை பொதுமக்களுக்கு வழங்க தகுதி இருந்தும் இந்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது.
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க அகில இந்திய பொது செயலாளர்
எனவே எந்தவித தடையும் இன்றி 4 ஜி சேவையை வழங்க அனுமதிக்க வேண்டும். முறையான தொழில்நுட்பம் இருந்தால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை யாராலும் அசைக்க முடியாது என்றார். இதற்கு மாறாக பிரதமர் மோடி தனியார் நிறுவனத்திற்கு துணை நிற்பது போல அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு நிற்பதில்லை.
எனவே இந்திய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழிநுட்பத்தை உயர்த்த முன்வர வேண்டும் என இந்த மாநாட்டின் வாயிலாக வலியுறுத்த உள்ளதாக கூறினார். இந்த சந்திப்பின்போது மாநில செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ஆண்ட பெருமாள், மாவட்ட செயலாளர் சூசைமரிய அந்தோணி, உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ச.செந்தில், செய்தியாளர், தென்காசி மாவட்டம்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.