தமிழகத்தில் இருந்து, கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்ல வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய கோரி பாவூர்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து தினமும் கேரளாவிற்கு மணல், ஜல்லி கற்கள், குண்டு கற்கள், எம் சாண்ட் போன்ற கனிம வளங்கள் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால் தென்காசி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெருக்கடி, சாலைகள் சேதம், பல விபத்துகளும் ஏற்படுகிறது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கனிம வள கொள்ளையை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அறிவித்திருந்தனர். அதன்படி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு சமூக பாதுகாப்பு இயக்கங்கள் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ராம உதயசூரியன் தலைமையில் கனிமவள கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது தமிழகத்தில் இருந்து, கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெறக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ALSO READ | திருச்சியில் கார் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் - புளியமரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
மேலும் தென்காசி மாவட்டத்திலிருந்தும் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கனிம வளங்களை கேரளாவுக்குக் கொண்டு செல்லும் உரிமத்தை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி போராட போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது.
செய்தியாளர்- செந்தில்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tenkasi