தமிழக கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக கேரளாவிற்கு செல்லும் கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டதால் 70 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக கேரள எல்லைப்பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் கேரளா மாநிலத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் அத்தியாவசியமான பொருட்களான காய்கறிகள், பால் மற்றும் அதே போல கட்டுமான பொருள்கள்களை ஏற்றி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கனிம வளங்கள் அதிகபடியாக கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததை தொடர்ந்து புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் தீடீர் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக 70க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் அதிகபடியான ஜல்லி கல், எம் செண்ட் ஏற்றி செல்வதை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அளவுக்கு அதிகமாக ஏற்றி உள்ளதை கண்டு படித்த போலீசார் ஒரு வண்டிக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அவதாரம் விதித்தனர் இதனால் கேரளாவுக்கு வரக்கூடிய லாரிகளை ஓட்டுநர்கள் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளனர் இதனால் அங்கு புளியரை முதல் கேசவபுரம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்க்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் கூறும்போது தமிழகத்தில் இருந்து தினந்தோறும் அதிகப்படியான லாரிகளில் கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்தி செல்வது வாடிக்கையாக உள்ளது தமிழக அரசு உடனடியாக தமிழகத்தின் இயற்கை வளங்களை அங்கு கொண்டு செல்வதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர் டிப்பர் லாரிகள் அதிகபடியாக இந்த வழியாக செல்வதால் மக்கள் சாலைகளில் செல்வதற்குக் கூட மிகவும் கடினமாக உள்ளது எனவும் அதே போல விபத்துகளும் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் கூறும்போது தற்போது ஒரு லாரிக்கு 10ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து உள்ளதாகவும் தொடர்ந்து இந்த பணியை செய்ய உள்ளதாகவும் மேலும் இது போன்று வரும் நாள்களில் அதிகப்படியான கனிம வளங்களை எடுத்துச் சென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.