முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

Tenkasi District | வனப்பகுதியில் இளைஞரின் சடலம் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தென்காசி மாவட்டம் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியின் மலைஉச்சியில் கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலத்தை காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் தமிழக- கேரள எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை செங்கோட்டை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மயிலாடும்பாறை மலை உச்சியில் தூர்நாற்றம் வீசி உள்ளது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடல் புதைக்கபட்ட நிலையில் இருந்ததையடுத்து செங்கோட்டை வட்டாச்சியர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் | Exclusive : தமிழ் ஈழம் குறித்து பாஜகவின் நிலைப்பாடு என்ன? - அண்ணாமலை விளக்கம்

இதில் உடலானது கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தது. உடலை தோண்டி எடுத்து பார்க்கையில் ஆண் சடலம் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தென்காசி காவல்துறை துணை  கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில், காவல் துறையினர் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக புளியரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை  மேற்கொண்டு வருகின்றனர் வனப்பகுதியில் இளைஞரின் சடலம் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் : ச.செந்தில்

First published:

Tags: Tenkasi