தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மகளை அரிவாளால் வெட்டிய தந்தை போலீசாரிடம் அரிவாளுடன் சரணடைந்தார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆரியங்காவூர் சுடலைமாட சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த வேல்சாமி (51) இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அதில் மகள் சுதா (வயது 20) என்பவர் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் வீட்டிலிருந்து பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இவர் அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
Also Read: முன்னாள் காதலியுடன் பேசிய இளைஞருக்கு கத்திக்குத்து - காதலன் வெறிச்செயல்
இதனை தொடர்ந்து அதிகாலையில் தனது தந்தையுடன் சுதா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். காதலித்த வாலிபரை திருமணம் செய்து கொள்வேன் என்று முரண்டு பிடித்ததால் ஆத்திரமடைந்த வேல்சாமி வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து மகள் என்றும் பாராமல் சுதாவின் தலையில் பலமாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சுதாவை ரத்த வெள்ளத்துடன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் அரிவாளால் மகளை வெட்டிய வேல்சாமி பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு சென்று அரிவாளுடன் சரணடைந்தார், இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் இந்த சம்பவத்தால் கிராம பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: ச.செந்தில் (தென்காசி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Attempt murder case, Crime News, Father, Love issue, Love life