Home /News /tamil-nadu /

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... மோதிக்கொள்ளும் உடன்பிறப்புகள்.. தென்காசி மாவட்ட பொறுப்பாளர் மீது குப்பைத்தொட்டி வீச்சு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... மோதிக்கொள்ளும் உடன்பிறப்புகள்.. தென்காசி மாவட்ட பொறுப்பாளர் மீது குப்பைத்தொட்டி வீச்சு

தென்காசி

தென்காசி

DMK : தென்காசி (Tenkasi) மாவட்டத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் மீதே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் உள்கட்சி பிரச்னையில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிவபத்மநாதன் மீது குப்பை தொட்டியை வீசி கார் கண்ணாடியை உடைத்து அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக இருப்பவர் சிவபத்மநாதன் தென்காசி நகர எல்லை பகுதியான குத்துக்கல் வலசையில் மாவட்டத்திற்கு வருகைத்தரும்  நகர்புற தேர்தலுக்கான பொறுப்பாளரும் வருவாய் துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை வரவேற்பதற்காக காரில் தனது ஆதரவாளர்களுடன்  சென்றுகொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியில், குத்துக்கல்வலசைபகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகில் நிறுத்தி, டீ குடித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த தி.மு.க தென்காசி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை மற்றும் கட்சி  பிரமுகர்கள் சிலர் உள்ளாட்சித் தேர்தல் பிரச்னை குறித்து சிவபத்மநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் விவாதித்துள்ளதாக  கூறப்படுகிறது.

    அப்போது அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை  முற்றி  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  வாக்குவாதம் அதிகரித்ததால் சிவபத்மநாதன் தனது  காரில் ஏறி புறப்பட்டுள்ளார். அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் டீக்கடை அருகில் இருந்த குப்பைத் தொட்டியை தூக்கி, காரில் அடித்துள்ளனர். இதில் காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. கண்ணாடி துகள்களோடு குப்பை தொட்டியில் இருந்த எச்சில் இலைகள் முன் இருக்கையில் இருந்த சிவபத்மநாதன் மீது விழுந்துள்ளது.

    Also Read: நகர்புற உள்ளாட்சி தேர்தல் : ராணிப்பேட்டை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    இதுதொடர்பாக அவருடன் வந்தவர்கள் புகார் அளித்ததன் பேரில் இச்சம்பவம் குறித்து இலத்தூர் காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம் 147,427, 323 உள்ளிட்ட 5  பிரிவின்கீழ் இளைஞரணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.  திமுக உள்கட்சி பிரச்சினையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Also Read: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    இது குறித்து சிவபத்மநாதனின் கருத்தை அறிய அவரை சென்று பார்த்த போது உள்கட்சி பிரச்சனை இதனை பெரிதாக்க வேண்டாம் என தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  வேட்பாளர் பட்டியலே வெளியிடப்படாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு  முன்பு பாளையங்கோட்டையில் மாநகாட்சி உறுப்பினர் பதவிக்கு சீட் பெறுவதில் ஏற்பட்ட போட்டியில் திமுக வட்ட செயலாளர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் தற்போது தென்காசி மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்  மீதே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : P.S.சிவமணி (நெல்லை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: DMK, Local Body Election 2022, Tamilnadu, Tenkasi

    அடுத்த செய்தி