ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கணவன்.. மிளகாய் பொடி தூவி அடித்துக்கொன்ற மனைவி

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கணவன்.. மிளகாய் பொடி தூவி அடித்துக்கொன்ற மனைவி

தென்காசி கொலை

தென்காசி கொலை

தென்காசியில் கணவன் வேறு பெண்ணோடு தொடர்பு கொண்டதை கைவிட மறுத்ததால் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கண்ணில் மிளகாய் பொடி தூவி கணவரை அடித்துக் கொலை செய்த பெண் வேறு பெண்ணுடன் தொடர்பை கைவிட மறுத்ததால் ஆத்திரம் போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது 40). இவருக்கு நாச்சியார் (வயது36) என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

முருகன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் செங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. முருகன் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

Also Read:  சென்னையில் சிறுமிகளை அடித்து துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திரிபுரா தம்பதி கைது

இதனையறிந்த நாச்சியார் தனது கணவரை கண்டித்துள்ளார். ஆனால் முருகன் அதனை கேட்கவில்லை தொடர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த முருகன் மனைவியை அவதூறாக பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாச்சியார் சமையலறையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து முருகனின் முகத்தில் வீசியுள்ளார். பின்னர் அங்கு கிடந்த கம்பால் முருகனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

Also Read: சொத்து தகராறில் பெண் மீது வெந்நீரை ஊற்றிய கொடூரம் - திருவாரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இதில் முருகன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் அங்கு அக்கம் பக்கத்தினர் முருகனின் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். உயிருக்குப் போராடிய கட்டிட தொழிலாளி முருகனை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக செங்கோட்டை காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் வழக்கு பதிவு செய்து நாச்சியாரிடம் விசாரணை நடத்தி வருகின்றார். கணவன் வேறு பெண்ணோடு தொடர்பு கொண்டதை கைவிட மறுத்ததால் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : ச.செந்தில் (தென்காசி)

First published:

Tags: Crime News, Death, Illegal affair, Illegal relationship, Wife Attacks Husband